இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்தவர்கள் என்று மட்டும் சுமார் 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள்.
நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும். 168 தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாக பார்க்க வேண்டும்.
இன்னும் விழிப்புணர்வு வேண்டும்
உதாரணமாக கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். நீக்கப்பட்ட அந்த 40 பேர்களில், 4 பேர் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலமாக சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அதேபோல, மத்த 3 பேரையும் எதற்காக நீக்கியுள்ளார்கள் என்று சரி பார்க்க வேண்டும். நாம் இவ்வளவு கவனமாக இருந்தும் -ஒரே வாக்குச்சாவடியில், ஓரணியில் தமிழ்நாட்டில் இணைந்த 4 பேர் விடுபட்டிருக்கிறார்கள் என்றால் நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்!