தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல யூடியூபர் மற்றும் பத்திரிகையாளரான. பெலிக்ஸ் ஜெரால்டு, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவருமான விஜய் தலைமையிலான கட்சியில் இணைந்துள்ளார். இந்த இணைப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு வேகமெடுத்து வரும் தவெகவுக்கு கூடுதல் வலிமை அளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பெலிக்ஸ் ஜெரால்டு, ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் மூலம் தமிழக அரசியலை ஆழமாக பகுப்பாய்வு செய்து வரும் மூத்த ஊடகவியலாளர். அரசியல் நிகழ்வுகள், தேர்தல் நிலவரம், சமூகப் பிரச்சினைகள் குறித்த அவரது கருத்துக்கள் பரவலாக கவனம் பெற்றவை என்றே கூறலாம்.
விஜய் கட்சியில் இணைந்தார் பெலிக்ஸ் ஜெரால்டு
குறிப்பாக தமிழக மக்களிடையே இவர் பிரபலம் என்பதே அதற்கு சான்று. கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ள இவர், தற்போது தவெகவில் இணைவது அக்கட்சியின் ஊடகப் பிரிவுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக இவர் விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். தமிழக வெற்றிக் கழகம், 2024 பிப்ரவரியில் விஜயால் தொடங்கப்பட்ட இயக்கமாகும். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக நீதி, மதச்சார்பற்ற தன்மை, தமிழ் தேசியம் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட தவெக, இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.