மதவெறியைத் தூண்டி ஒரு இளைஞனின் உயிரைப் பறித்திருக்கிறது சங்கீப் பரிவாரக் கும்பல் இதற்கு பாஜக-வும், ஆர்.எஸ்.எஸ்-சும் இதர சங்கப் பரிவார அமைப்புகளும்தான் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
97 லட்சம் பேரை நீக்கியதால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்..?
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் NM தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் SIR சீர்திருத்தத்தின் வாயிலாக சுமார் ஒரு கோடி பேர் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று நான் ஆரம்பம் முதலே கூறி வந்தேன் தற்போது தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களில் எத்தனை பேர் அண்டை நாடுகளில் இருந்து தமிழகத்தில் ஊடுருவியவர்கள்? தமிழ்நாட்டில் ஊடுருவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? தற்போது நீக்கப்பட்டுள்ள 97 லட்சம் பேரை நீக்கியதன் மூலம் என்ன சாதிக்கப் போகின்றார்கள்? இவர்கள் அனைவரும் பூர்வீக குடிகளா ? இல்லையா? இந்த தேசத்தின் குடிமக்களா? இல்லையா?
24
தேர்தலில் தில்லுமுல்லு செய்ய பாஜக திட்டம்
இவர்கள் குடியுரிமையை சோதிக்கிற ஒரு செயல் திட்டத்தை தேர்தல் ஆணையம் மூலமாக நடைமுறைப்படுத்துவது உள்நோக்கம் கொண்டது. ஏதோ ஒரு திட்டத்தை முன் வைத்து தான் இதை செய்து கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் ஆபத்தான அரசியல். 97 லட்சம் பேரின் வாக்குகள் பறிக்கப்பட்டதன் மூலம் பாஜக இந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்ய திட்டமிட்டு இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது தமிழ்நாட்டு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் இந்த சாதிய மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் வளர்வதற்கும் வேரூன்றுவதற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது.
34
மக்களிடம் வெறுப்பை வளர்ப்பது விஜய்யின் செயல் திட்டம்
விஜய் தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வதன் மூலம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார். அவர் தனது கட்சியை வளர்க்க வேண்டும், முதல்வராக வேண்டும் என்பதை விட திமுகவிற்கு எதிரான அவதூறுகளை பரப்ப வேண்டும், பகையை மூட்ட வேண்டும் மக்களிடம் வெறுப்பை வளர்க்க வேண்டும் என்பது அவருக்கு வழங்கப்பட்டுள்ள செயல் திட்டமாக உள்ளது.
அவர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து இந்த நாள் வரை இந்த ஒன்றை மட்டுமே செயல் திட்டமாக வைத்துள்ளார். அவர் என்ன செய்யப் போகிறார், ஆட்சிக்கு வந்தால் என்ன வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரப் போகிறார், எப்படி ஊழலை ஒழிக்க போகின்றார், போதை, மது பொருட்களை எப்படி சுத்தமாக துடைத்தெரிய போகிறார், எப்படி அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கப் போகிறார், எப்படி கல்வியை மேம்படுத்தப் போகிறார், தமிழ்நாட்டின், பொருளாதார வளர்ச்சியை உயர்த்தப் போகின்றார் என்பதைப் பற்றி ஒருநாளும் பேசவில்லை.
எப்போதும் திமுக எதிர்ப்பு, திமுக வெறுப்பு என்பதே விஜய் என்பதாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.