அதிமுக மற்றும் திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தில் இலக்குகளை எட்டிய வாக்குச்சாவடி முகவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் எதிர்கட்சியான அதிமுக அதிரடியாக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்ற முழக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார்.
கொங்கு மண்டலத்தை பிரச்சாரத்தை முடித்த அவர், தற்போது தென் மாவட்டங்களில் மக்களை சந்தித்து திமுக அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார். இதற்கு இணையாக திமுகவும் ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் திமுகவில் இரண்டு வாக்காளர்களை சேர்க்கும் பணியை படு வேகமாக நடத்தி வருகிறது.
24
வாக்காளர்களை இணைக்க இலக்கு
அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியில் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இலக்கை தொட்ட திமுக நிர்வாகிகளுக்கு பரிசு மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று "ஓரணியில் தமிழ்நாடு" பரப்புரையில் 40% க்கு மேல் உறுப்பினர்களை சேர்த்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதலமைச்சர் பரிசு பொருட்களை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில், திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் பரப்புரையில் , 40% க்கு மேல் உறுப்பினர்களை சேர்த்த வாக்குச்சாக்கடி முகவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
34
வாக்குச்சாவடி முகவர்களுக்கு பரிசு மழை
ஜூலை 1ஆம் தேதி திமுகவின் ஒரு அணியில் தமிழ்நாடு தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு திமுக நிர்வாகியும் விடுவீடாகச் சென்று 10 நிமிடங்கள் பேசி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 40 சதவீதம் வாக்காளர்கள் திமுக உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கின்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் திமுகவின் "ஓரணியில் தமிழ்நாடு"திட்டத்தின் மூலம் அதிக உறுப்பினர்களை திமுகவில் சேர்த்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு இன்று பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.