இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதாவது நான், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி என பல்வேறு இடங்களில், ஓடும் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன். நகையை திருடியதும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுவேன். கடந்த 15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி உள்ளேன்.