திமுக எம்எல்ஏவின் உதவியாளர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்..! என்ன காரணம்? சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

Published : Nov 21, 2025, 02:31 PM IST

கழக கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏவின் உதவியாளர் வி.எஸ்.நேதாஜி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சாலைப்பணி உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதை அடுத்து நீக்கம்.

PREV
15
சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திமுக இரண்டாது முறையாக ஆட்சியை அமைத்து வரலாற்றை மாற்ற வேண்டும் குறிக்கோள்களுடன் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சியில் சரிவர செயல்படாத நிர்வாகிகள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருகின்றனர்.

25
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் `ஒன் டூ ஒன்' என்ற சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். திமுக மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை முதல்வர் தனித்தனியே சந்தித்து வருகிறார். அப்போது புகாருக்கு உள்ளாகும் நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர்.

35
கோவை நிர்வாகி

நேற்று முன்தினம் திமுக நிர்வாகிகள் கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம் திமுகவில் இருந்துகொண்டே, எதிர்க்கட்சியான அதிமுகவினருடன் தொடர்பில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உதவியாளரும், வர்த்தக அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த வி.எஸ்.நேதாஜி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

45
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் வி.எஸ்.நேதாஜி அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (suspension) வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
வர்த்தக அணி அமைப்பாளர்

சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளிலும் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த ஒரு பணியும் தராமல் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததை அடுத்து வி.எஸ்.நேதாஜி வர்த்தக அணி அமைப்பாளராக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories