அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்த கடைசிப் படமான ஜனநாயகன் நாளை (ஜனவரி 9) வெளியாக இருந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காதது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் வேளையில், விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராததால் சென்சார் போர்டை வைத்து பாஜக விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
24
விஜய்க்கு தமிழக காங்கிரஸ்காரர்கள் ஆதரவு
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விஜய் மற்றும் தவெகவினரே மவுனம் சாதித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு கொடுத்து வருகிறது.
அதாவது தமிழக காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி, விஜய்வசந்த், மாணிக்கர் தாகூர், கார்த்தி சிதம்பரம் என அனைத்து எம்.பி.க்களும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக விஜய்க்கு ஆதரவு கொடுத்து விட்டது.
ஏற்றுக்கொள்ள முடியாதது
'நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
34
தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது.
அரசியல்வாதி விஜய்யை எதிர்கொள்ளுங்கள்
இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம். மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என்று தமிழக காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்படி இருக்கும்போது விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் ஓவராக குரல் கொடுத்துள்ளது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு காங்கிரஸ் குரல் கொடுப்பது குறித்து திமுக அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
காங்கிரஸ் குறித்து பேசிய கே.என்.நேரு
அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, ''மத்திய அரசின் சென்சார் போர்டுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவங்க கொடுக்க போறாங்க. இவங்க வாங்க போறாங்க. ஜெயலலிதா காலத்தில் கூட இது நடந்தது. அவர் போய் கேட்டுக்கொண்டார். ஆகையால் எங்களுக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை. காங்கிரஸ் ஏன் விஜய்க்கு குரல் கொடுக்கிறது என்பது தெரியவில்லை. புரியவில்லை. தெரியாத விஷயத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது'' என்று தெரிவித்தார்.