தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்பதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா சீட் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிக அதிருப்தியில் உள்ளது. இதனால் திமுக அல்லது விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு,?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி கணக்கை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பிடித்துள்ளது.
அதே நேரம் எதிரணியாக உள்ள அதிமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது. இதற்காக தவெகவை தங்கள் அணிக்கு அழைத்த நிலையில், விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து விட்டார். இதனால் வேறு வழியின்றி பாஜகவுடனான கூட்டணியை மீண்டும் புதுப்பித்துக்கொண்டது அதிமுக,
26
பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கும் இபிஎஸ்
அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக யாரிடம் பேசுவது என்ற நிலைப்படு தெரியாமல் திணறி வருகிறது. அடுத்தாக தேமுதிக அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக கடந்த சில மாதங்கள் வரை அறிவித்திருந்தது.
ஆனால் ராஜ்யசபா சீட் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தேமுதிக அதிருப்தியில் உள்ளது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பிடித்தால் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
36
தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு
எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் தேமுதிகவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆவலோடு இருந்தது. ஆனால் அதிமுக சார்பாக போட்டியிடும் 2 பேரை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலின் போது தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா ஒதுக்கீடு செய்யப்படும் என அதிமுக அறிவித்தது.
இதற்கு முக்கிய காரணமாக ஏற்கனவே அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோருக்கு ராஜ்யசபா சீட் வழங்கிய நிலையில், அந்த கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலின் போது தங்களுக்கு ஆதரவாக நிற்காமல் பாஜகவிற்கு பல்டி அடித்தது அதிமுகவை அதிரவைத்தது.
இதன் காரணமாகவே தேமுதிகவை தங்கள் அணியில் இடம்பெற வைக்க அதிமுக காய் நகர்த்தியது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிகவை தங்கள் அணியில் நீடிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் இதனை தேமுதிக ஏற்கவில்லையென்றே கூறப்படுகிறது.
ராஜ்யசபா சீட் தொடர்பாக பிரேமலதா கூறுகையில், 2024 பாராளுமன்ற தேர்தலின் போதே 5 எம்பி சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை உறுதி செய்யப்பட்டது. வாய்வழி மட்டும் அல்ல எழுதுபூர்வமாகவும் உறுதி அளித்தனர் அதிமுக அறிவிக்க வேண்டிய இடத்தில் இருப்பதால் தான் நாங்கள் அமைதியாக இருந்தோம்.
56
அதிமுகவுடன் கூட்டணியா.?
அரசியல் என்பது தேர்தலை ஒட்டியது தான். 2026 தேர்தலை ஓட்டிதான் ராஜ்ய சபா சீட் அறிவிக்கப்பட்டுள்ளது அவர்களின் கடமையை ஆற்றி உள்ளனர். தேர்தலை ஒட்டி எங்களின் கடமையையும் ஆற்றுவோம் என தெரிவித்தார். மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக அவர்கள் கூறியது குறித்து அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைபாட்டை முடிவு செய்வோம் என அறிவித்தார். இந்த நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக அல்லது விஜய்யுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
66
புதிய கூட்டணிக்கு மாற தயாராகும் தேமுதிக
அதற்கு ஏற்றார் போலவே கடந்த சில மாதங்களாகவே திமுகவை பெரிய அளவில் விமர்சிக்காமல் திமுகவை பாராட்டியே பேசி வருகிறார். அதுவும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்ததும், அதற்கு பிரேமலதா நன்றி தெரவித்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் என்ன வேண்டும் என்றாலும் கடைசி நேரத்தில் நடக்கலாம். எனவே அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.