அந்நியன், அம்பி இரண்டுமே அவர் தான்; சீமானை விளாசிய பிரேமலதா - எதனால் தெரியுமா?

Ansgar R |  
Published : Nov 04, 2024, 06:54 PM IST

Premalatha Vs Seeman : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து காட்டமாக பேசியுள்ளார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.

PREV
14
அந்நியன், அம்பி இரண்டுமே அவர் தான்; சீமானை விளாசிய பிரேமலதா - எதனால் தெரியுமா?
Seeman

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தளபதி விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்னும் தன்னுடைய கட்சியின் அறிவிப்பை இந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்டார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடியும், பாடலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து குறுகிய காலத்தில் முடிவு செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் தளபதி விஜய் பேசிய விஷயங்கள் இப்போது வரை மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.

உஷார் மக்களே.! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.! இத்தனை மாவட்டங்களுக்கா.?

24
Thalapathy vijay

தளபதி விஜய் தன்னுடைய கட்சி குறித்து அறிவித்த புதிதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் பெரிய அளவில் தளபதி விஜய்க்கு வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது மாநில மாநாட்டில் தளபதி விஜய் பேசிய விஷயங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதலில் தளபதி விஜய் மீது கடுமையான கண்டனங்களை முன் வைத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். மத்தியில் நடப்பது பாசிச ஆட்சி என்றால்? இங்கு நடப்பது என்ன பாயாசமா? என்று யாரை அவர் கிண்டல் செய்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறுவது எந்த வகையில் சாத்தியமானது என்பது குறித்த பல விஷயங்கள் குறித்த தனது கோபத்தை ஒரு ட்விட்டர் பதிவின் மூலம் தொல் திருமாவளவன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கத்து.

34
TVK Vijay

அதை தொடர்ந்து அண்மையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் மீட்டிங் ஒன்றில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தளபதி விஜயை நேரடியாகவே தாக்கி பேசினார். ஒன்று அவர்களுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும், அல்லது விஜய்க்கு எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும் என்றும், இது ஒட்டுமொத்தமாக ஒரு கூமுட்டையாக தான் முடிய போகிறது என்றும் பேசினார். இதுஒருபுரம் இருக்க பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் போன்ற பல அரசியல் தலைவர்கள் தளபதி விஜயின் திராவிட முன்னேற்றக் கழக எதிர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

44
NTK Seeman

இந்த சூழலில் தேமுதிக கட்சியின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது தளபதி விஜயின் கட்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை மட்டும் கூறிய பிரேமலதா, சீமான் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட பொழுது கடும் கோபத்திற்கு உள்ளானார். "அவர் ஒரு சில சமயம் அந்நியன் போல பேசுகிறார். மற்றொரு சமயம் அம்பி போல பேசுகிறார். அரசியலைப் பொறுத்தவரை ஒரு தரப்பில் நின்று பேசுவது தான் சரி. அவர் இப்படி மாற்றி மாற்றி பேசுவது மிகவும் தவறு" என்று கூறியிருக்கிறார்.

ஒரே இடத்தில் படிக்கவும் செய்யலாம்.! வேலையும் பார்க்கலாம்.! சூப்பர் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு

Read more Photos on
click me!

Recommended Stories