விஜயகாந்துக்கு 'பாரத ரத்னா' வழங்கணும்.. தேமுதிக தீர்மானம்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!

Published : Jan 09, 2026, 08:43 PM IST

தமிழகத்தில் மதரீதியிலான மோதல்களை உருவாக்குபவர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட 10 தீர்மானங்கள் தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

PREV
13
தேமுதிக மாநாடு

கடலூர் மாவட்டம் வேப்பூரில் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற தலைப்பில் தேமுதிக மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

23
தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை

மேலும் தமிழகத்தில் மதரீதியிலான மோதல்களை உருவாக்குபவர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையையும் நிறைவேற்றும் ஆட்சி அமைய வேண்டும். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத்திருத்தங்களை மறுபரீசிலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரமைத்து மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேன்டும். தமிழகத்தில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்மணிகளை போதிய சேமிப்பு கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும்.

33
கூட்டணி முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம்

தூய்மை பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தேமுதிக கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளருக்கே முழு அதிகாரம் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்து இந்த மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories