தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!

Published : Jan 09, 2026, 10:06 PM IST

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து விட்டேன். மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை பார்த்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

PREV
14
தேமுதிக மாநாடு

கடலூர் மாவட்டம் வேப்பூரில் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற தலைப்பில் தேமுதிக மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். பொருளாளர் எல்.கே.சுதீஷ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

24
தேமுதிகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது

இந்த மாநாட்டில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ''கேப்டன் இல்லாமல் நாம் யாரும் இல்லை. கடலூர் மாவட்டம் எப்போதும் விஜயகாந்தின் கோட்டை. விஜயகாந்துக்கு இணை எந்த தலைரும் இல்லை. நமது கட்சிக்கு இணையாக எந்த கட்சியும் இல்லை. 

மற்ற கட்சிகளில் காசு கொடுத்து தான் கூட்டம் சேரும். ஆனால் தேமுதிக தொண்டர்கள் சொந்த செலவில் திரண்டுள்ளனர். இனி தேமுதிக அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இந்த கூட்டத்தை பாருங்கள். தேமுதிகவை எந்த கொம்பனும் சாதாரணமாக எடை போட முடியாது.

34
வெற்றி ஒன்றே தேமுதிகவின் கொள்கை

தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள். மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பிய கூட்டணி அமையும். தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக ஜாதி, மனம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட கட்சி. வெற்றி ஒன்றே தேமுதிகவின் கொள்கை. தேமுதிகவால் கூட்டணி கட்சிகள் பலனடைந்து வருகின்றன'' என்றார்.

44
தேமுதிக யாருடன் கூட்டணி?

தொடர்ந்து தேமுதிக யாருடன் கூட்டணி? என்பது குறித்து பேசிய பிரேமலதா, ''தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து விட்டேன். மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை பார்த்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக யாருடன் கூட்டணி என என்னைத்தவிர யாருக்கும் தெரியாது. எனது மகன் விஜய பிரபாகரனுக்கு கூட தெரியாது. 

நமது தொண்டர்கள், கட்சியை மதிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இன்னும் கூட்டணியை முழுமையாக அறிவிக்கவில்லை. ஆகவே தை பிறந்தால் வழி பிறக்கும். தேமுதிமுக யாருடன் கூட்டணி என்பதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டும். பின்னர் அறிவிப்போம்'' என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories