Published : Oct 29, 2024, 03:59 PM ISTUpdated : Oct 29, 2024, 04:05 PM IST
Diwali School Holiday: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வகையில் நவம்பர் 1ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படுவது வழக்கம்.
25
School Student
இந்நிலையில் இம்முறை தீபாவளி பண்டிகை முன்கூட்டியே அதாவது அக்டோபர் 30ம் தேதியே வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை யாருக்கு கொண்டாட்டோ இல்லையோ பள்ளி மாணவர்களுக்கு ந்தோஷத்தில் உள்ளனர். பட்டாசு வெடிப்பது ஒரு பக்கம் என்றால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால் உற்சாகத்தில் உள்ளனர்.
அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டம் வருகிற அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
45
Diwali Holiday
எனவே இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளி மறுநாள் அதாவது நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து 4 நாட்கள் விடமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வரும் நிலையில் மற்றொரு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.