வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கனுமா.? வெளியான சூப்பர் அறிவிப்பு

First Published | Oct 29, 2024, 3:21 PM IST

2025ஆம் ஆண்டு தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும், பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர்கள் தான் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும். அந்த வகையில் உள்ளாட்சி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது முக்கியமானதாகும். இந்தநிலையில் 2025ஆம் ஆண்டு  தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் படி இன்று முதல்  அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

வாக்காளர் சிறப்பு முகாம்

வரைவு வாக்காளர் பட்டியல்கள் https://www.elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி தமிழகத்தில் மொத்தமாக  6,27,30,588 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள்: 3,07,90,791, பெண்கள்: 3,19,30,833, மூன்றாம் பாலினத்தவர்: 8,964) மேலும் தமிழகத்திலையே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளுர் தொகுதி உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி,  16.11.2024, 17.11.2024, 23.11.2024 24.11.2024 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tap to resize

வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்க ஆவணங்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.  பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

முகவரிச் சான்று ஆவணங்கள்

முகவரிக்கான நீர்/ மின்சாரம்/ எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது 1 வருடத்திற்காவது)ஆதார் அட்டை, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி/ அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம், தேசியமயமாக்கப்பட்ட/ கடவுச் சீட்டு விவசாயி புத்தகம் உட்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் (குத்தகைதாரராக இருந்தால்), பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (சொந்த வீடு எனில்) 

வயதுச் சான்றுக்கான ஆவணங்கள்

தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்பு/ நகராட்சி அதிகாரி/ பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் வழங்கிய பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ/ ஐசிஎஸ்இ/ மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள், அதில் பிறந்த தேதி இருந்தால்,  இந்திய கடவுச் சீட்டு ஆகியவற்றை சமர்பித்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

Latest Videos

click me!