திடீரென சாமி அவதாரம்
இந்தநிலையில் தான் காலத்தின் மாற்றத்தால் புதிய அவதாரம் எடுத்துள்ளார் அன்னபூரணி, செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் தொடங்கியுள்ளார். அன்னபூரணி அரசு அம்மாவின் அவதார திருநாள் விழாவானது வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
அப்போது அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு பாதபூஜை செய்தும், மாலை அணிவித்தும், மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் பக்தர்கள் ஆசி பெற்றனர். அப்போது தன்னை பார்க்க வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கியும், குடும்ப பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அருள் வாக்கு கூறி ஆசி வழங்கினார்.