தமிழக அரசு அறிவித்த 20% சதவீத போனஸ்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

First Published | Oct 29, 2024, 10:55 AM IST

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5775 பேர் பயனடைவார்கள்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்முறையை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சூப்பர் சான்ஸ்.! தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டைக்கு சிறப்பு ரயில்.! உடனே முன்பதிவு செய்யுங்க

Tap to resize

அந்த வகையில் தற்போது கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2023-2024-ம் ஆண்டு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி II ஆகிய இரண்டு சர்க்கரை ஆலைகளுக்கு 8.33% சதவீதம் போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மீதமுள்ள 14  கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 8.33% போனஸ், கருணை தொகை 1.6% என மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5775 பேர் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராக்கெட் வேகத்தில் சென்ற விமான கட்டணம்.! மதுரைக்கு பிளைட் டிக்கெட் எவ்வளவு தெரியுமா.?

Latest Videos

click me!