diwali train
தீபாவளி கொண்டாட்டம்
சொந்த ஊரில் வேலை இல்லாத காரணத்தாலும், படித்த படிப்பிற்கு வேலை தேடியும் பல லட்சம் பேர் சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்கின்றனர். மேலும் மேnfபடிப்பிற்காகவும் பல நகரங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. அந்த வகையில் சொந்த ஊரை விட்டு பிழைப்புக்காவும் படிப்பிற்காகவும் சென்றவர்கள் விஷேச நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் சொந்த ஊர் திரும்புவார்கள். அங்கு குடும்பத்தினர், நண்பர்களோடு பண்டிகையை கொண்டாடுவார்கள். அந்த வகையில் தீபாவளி பண்டிகையேன்றால் மொத்தமாக ஊரையே காலி செய்து விட்டு புறப்பட்டு விடுவார்கள்.
flight
தொடர் விடுமுறை- உற்சாகத்தில் பொதுமக்கள்
அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் தமிழகத்தில் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதற்கு ஒரு படி மேலே சென்று புதுச்சேரியில் அக்டோபர் 30ஆம் தேதி புதன் கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 5 நாட்கள் புதுச்சேரி மக்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. எனவே தொடர் விடுமுறை காரணமாகவும் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடவும், சுற்றுலா செல்லவும் பொதுமக்கள் தயாராகியுள்ளனர். அந்த வகையில் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவை செய்துள்ளனர்.
flight ticket
நிரம்பிய டிக்கெட் - பொதுமக்கள் அவதி
இருந்த போதும் அனைத்து இடங்களில் முன்பதிவு நிரம்பி விட்டதால் சொந்த காரில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் போன்றவை காரணமாக அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு விமானத்தில் பயணம் செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே தனியார் பேருந்து கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது விமான கட்டணம் ராக்கெட் வேகத்தை போல பல மடங்கு அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று சென்னையில் இருந்து கோவை, சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, டெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், விமான கட்டணகள் அதிகரித்துள்ளது.
ticket flight
கிடு கிடுவென அதிகரித்த கட்டணம்
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கான எப்பவும் 4,109 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 8,976 முதல் 13,317 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கான கட்டணம் 11,749 ரூபாய் முதல் 17,745 வரை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இன்றே விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் விமான கட்டணங்கள் மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.