சலுகை வழங்கிய ரயில்வே துறை
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 50 சதவிகிதம் பேர் வரை ரயிலில் பயணிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த கூடுதல் ஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் ரயிலில் பயணம் செய்வோரை வழியனுப்ப வரும் நபர்கள் கட்டாயம் பிளாட்பார்ம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் சமயத்தில் இதனை தடுக்க சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் அக்டோபர் 29,30 ஆகிய தேதிகளில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் நெரிசல் இன்றி பயணிக்க, இது உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள், மருத்துவ தேவையுள்ள பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.