சூப்பர் சான்ஸ்.! தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டைக்கு சிறப்பு ரயில்.! உடனே முன்பதிவு செய்யுங்க

First Published | Oct 29, 2024, 10:30 AM IST

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடிக்கும் தாம்பரத்திற்கும் இடையே கூடுதல் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அக்டோபர் 29, நவம்பர் 4, அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இறுதி கட்ட உற்சாகம் களை கட்டியுள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியூரில் வேலை பார்ப்பதற்காவும், படிப்பதற்காவும் வந்த மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் நேற்று முதல் தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி மொத்தமாக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதே போல ரயில்வே துறை சார்பாகவும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. 

தீபாவளி-சிறப்பு ரயில்

ஏற்கனவே தீபாவளி பண்டிகையையொட்டி 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. எனவே தீபாவளி சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு தொடர்பாக பயணிகள் காத்திருந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி. மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களிலும் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது தென் மாவட்ட மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Tap to resize

train ticket

தென் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்

இந்த வகையில் சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - தாம்பரம் அதிவிரைவுசிறப்பு ரயில் (வண்டி எண்: 06188 / 06189 இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 4ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து  இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 10:20 மணிக்கு வந்து சேர்கிறது. இதே போல தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 5ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

தூத்துக்குடி- தாம்பரம்

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இரண்டு,  இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 9,  முன்பதிவு செய்யப்படாத பெட்டி 4 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயிலானது கோவில்பட்டி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக தாம்பரத்தை வந்து அடைகிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

Latest Videos

click me!