தமிழகத்தில் மொத்தம் 4775 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை அளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறுகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் அக்டோபர் 30-ம் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ம் தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை ரூ.29 கோடி சரிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மண்டல வாரியாக மதுவிற்பனை குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் சென்னை மற்றும் தூங்கா நகரமான மதுரை ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடம் பிடித்து வந்தன. இந்த முறை எந்த மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதை பார்ப்போம். சென்னை மண்டலத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 101 கோடிக்கும் மதுவிற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. மதுரை மண்டலத்தில் 88 கோடிக்கும், திருச்சியில் 86 கோடியும், சேலத்தில் 83 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 78 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
இதையும் படிங்க: TASMAC Shop: டோட்டலாக மாறப்போகும் டாஸ்மாக் கடை! என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா? குஷியில் குடிமகன்கள்!
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு மதுரையைவிட சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.101.34 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.