விஜய்யின் தூண்டிலில் சிக்கிய திருமா? ஒரே மேடையில் விஜய், திருமா - கலக்கத்தில் பிரதான கட்சிகள்

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிமை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்த நிலையில் விஜய்யும், திருமாவளவனும் நிகழ்ச்சி ஒன்றில் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thirumavalavan and Vijay are going to participate together in the Book release program vel
Thirumavalavan

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் அண்மையில் விக்கிரவாண்டியில் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டத்தை மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். இந்த கூட்டத்தில் பங்கேற்றதில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பதால் பிரதான கட்சிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் தகுதி உள்ளது.

Thirumavalavan and Vijay are going to participate together in the Book release program vel
Vijay

ஆனால் நம்மை மதித்து நமக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அதன்படி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனெனில் தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரு பிரதான கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு அவ்வளவு எளிதில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவது கிடையாது. கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்கவே முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரம் வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.


Thirumavalavan

இதனால் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கையில் வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாத நிலை உள்ளது. இதனை சரியாக பயன்படுத்த நினைக்கும் விஜய் இவர்களை குறிவைத்தே ஆதரவு அளிப்பவர்களுக்கு அதிகாரத்தில் உரிமை வழங்கப்படும் என அறிவித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

TVK Vijay

இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவனும், விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு தினம் அன்று விசிக தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள புத்தம் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Thirumavalavan

எம்.பி.யும், விசிக தலைவருமான திருமாவளவன் புத்தகத்தை வெளியிட அதனை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெற்றுக் கொள்கிறார். அண்மையில் நடைபெற்ற கொள்கை விளக்க மாநாட்டில் விஜய் பேசிய கருத்துகளுக்கு திருமாவளவன் எதிர்வினை ஆற்றியிருந்த நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனும், விஜய்யும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது குறித்த தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos

click me!