Diwali Bonus: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5308 பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. ஒதுக்கீட்டு உபரி உள்ள இரு ஆலைகளுக்கு 20% போனஸும், மற்ற ஆலைகளுக்கு 10% போனஸும் வழங்கப்படும்.
தமிழகத்தில் வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும். அதன்படியே இந்த ஆண்டும் அரசு சார்பாக மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு நுகர்பொருள் உள்ளிட்ட அரசு துறையை சார்ந்தவர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
24
சர்க்கரை ஆலைகள்
கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
34
போனஸ் மற்றும் கருணை தொகை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி – II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33 % மற்றும் கருணைத் தொகையாக 11.67 % என மொத்தம் 20 % போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 % மற்றும் கருணைத் தொகையாக 1.67 % என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5308 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ. 353.37 இலட்சங்கள் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு / பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.