8வது படித்திருந்தாலே சென்னையில் உடனடியாக வேலை.! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published | Dec 24, 2024, 1:32 PM IST

வேலை தேடி வரும் இளைஞர்களுக்காக முக்கிய அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன் படி வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என கூறியுள்ளார். 

Tamilnadu Job

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் நிறுனவங்களோடு இணைந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

அதில்,  தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

job vacancy

வேலைவாய்ப்பு முகாம்

இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார்துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வருகிற டிசம்பர் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tap to resize

job opportunities

யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

job for chennai

வாய்ப்பை பயன்படுத்துங்கள்

இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Latest Videos

click me!