சுயநலத்தோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி திருந்தலனா! இது தான் நடக்கும்! டிடிவி.தினகரன்!

Published : Dec 24, 2024, 01:26 PM ISTUpdated : Dec 24, 2024, 01:35 PM IST

எம்ஜிஆர் நினைவு நாளில் தினகரன் அஞ்சலி செலுத்தினார். திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

PREV
14
சுயநலத்தோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி திருந்தலனா! இது தான் நடக்கும்! டிடிவி.தினகரன்!
37th Anniversary of MGR

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 37வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

24
TTV Dhinakaran

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சி மீது கோபத்தில் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியாக அமையும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்பது முதலமைச்சரின் கனவாக இருக்கலாம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நாளொரு மேனியாக, பொழுதொரு மேனியாக பலவீனம் ஆகி வருகிறது. 

இதையும் படிங்க: இறுமாப்புடன் பேசி தீர்மானம் போடுபவர்களை தீர்மானமாக மக்களும் ஏமாற்றுவார்கள்! திமுகவை சீண்டும் தமிழிசை!

34
Edappadi Palanisamy

பழனிச்சாமிடம் இரட்டை இலை இருக்கிறது என்பதற்காக தங்களை ஏமாற்றிக் கொள்ளாமல் அதிமுக தொண்டர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என நான் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். என்னுடைய கருத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ஜெயலலிதாவின்  தொண்டர்கள் இணைந்து அந்த ஆட்சியை உருவாக்குவோம். 

44
TTV Dhinakaran Vs Edappadi Palanisamy

டெல்லி சென்றது என்னுடைய தனிப்பட்ட பயணம். ஆனால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே திமுகவை வீட்டுக்கு அனுப்ப முடியும். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என எம்ஜிஆர் கூறுவார்.  சுயநலத்தில் இருக்கும் பழனிச்சாமி ஒன்று திருந்த வேண்டும் இல்லையென்றால் திருத்தப்படுவார். அம்பேத்கர் குறித்து தனது கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories