எம்ஜிஆரை மோடியோடு ஒப்பிடுவதா.! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அதிமுக

Published : Dec 24, 2024, 12:11 PM IST

எம்ஜிஆர் நினைவு நாளில், அவரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டுப் பாராட்டிய அண்ணாமலைக்கு, ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மோடியை எம்ஜிஆருடன் ஒப்பிட முடியாது என்றும், இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

PREV
14
எம்ஜிஆரை மோடியோடு ஒப்பிடுவதா.! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அதிமுக
modi and annamalai

எம்ஜிஆரை புகழ்ந்த அண்ணாமலை

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,  எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குமிடையே, பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். தாங்கள் பட்ட துயரங்கள், வருங்கால சந்ததியினருக்கும் வரக் கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள்.

24
MG Ramachandran

மோடியும் எம்ஜிஆரும்

எம்.ஜி.ஆர்.  தமிழகத்தில் உள்ள, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.  எம்.ஜி.ஆர் அவர்களது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

34
jayakumar and annamalai

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் எம்ஜிஆர், எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்தார்கள் மறைந்தார்கள்,  இந்த உலகம் உள்ளவரை எம்ஜிஆர் புகழ் அழியாது.ஆயிரம் ஆண்டு ஆனாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது. அது கருணாநிதியால் கூட முடியவில்லை. எம்ஜிஆரை பொறுத்த அளவில் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது.

44
eps and mgr

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்

எம்ஜிஆர் சாதி சமய வேறுபாடுகளை பார்த்ததில்லை. அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர். எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர், அவருடன் மோடியை ஒப்பிடலாமா ? என கேள்வி எழுப்பினார். சாதி மத இனத்தை கடந்து சமத்துவம் பார்க்கும் இயக்கும் அதிமுக என தெரிவித்தவர், பாஜக கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவது தான். இது எந்த நிலையிலும் எம்ஜிஆரை மோடி உடன் ஒப்பிட முடியாது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் மோடிக்கும் எம்ஜிஆருக்கும் என ஆவேசமாக ஜெயக்குமார் தெரிவித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories