Alankanallur Jallikattu
ஜல்லிக்கட்டு போட்டி
பொங்கல் பண்டிகை என்றாலே அனைத்து மக்களுக்கும் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டியாகும், அந்த வகையில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது. பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும். இந்த போட்டியில் 1000க்கும் மேற்பட்ட காளைகள், இளைஞர்கள் கலந்து கொள்வார்கள்.
உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டின் படி கடுமையான விதிமுறைகளை செயல்படுத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. மாடு பிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும். சிறந்த காளை மற்றும் சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு கார், பைக் என பரிசுகள் வழங்கப்படும்.
Alankanallur Jallikattu
ஜல்லிக்கட்டு போட்டி நேரடியாக பார்க்க வாய்ப்பு
இந்த போட்டியை பார்க்க வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்த நிலையில் டிவியில் மட்டுமே பார்த்துகொண்டிருக்கும் மக்களுக்கு நேரடியாகவே சென்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் வகையில் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் 3 நாள் சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது.
Jallikattu tour
ஜல்லிக்கட்டு டூர்
இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மதுரையில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு போட்டி பார்க்கும் வகையில் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தின் படி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை தினத்தின் போது இரவு 9 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்படும் சுற்றுலாத்துறை பேருந்து அடுத்த நாள் காலை மதுரையில் உள்ள ஹோட்டல் தமிழ் நாடுக்கு அதிகாலை வந்து சேர்கிறது. அங்கு சிறிது நேரம் ஓய்விற்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அலங்காநல்லூருக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
TTDC Jallikattu tour
சுற்றுலா வளர்ச்சிதுறை ஏற்பாடு
ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு மதியம் உணவு அங்கேயே வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி பார்த்த பின்பு சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பார்க்க அழைத்து செல்லப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு பிறகு இரவு ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் தங்கி விட்டு அடுத்த நாள் காலையில் அங்கிருந்து பேருந்தும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TTDC TOUR
மதுரை கோயில் சுற்றுலா
இதனையடுத்து வரும் வழியில் அழகர் கோயில் மற்றும் பழமுதிர் சோலை முருகன் கோயிலையும் தரிசனம் செய்து சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், தரிசனத்திற்கு பிறகு பேருந்து மதுரையில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 10 மணியளவில் சென்னைக்கு சுற்றுலா வளர்ச்சி துறை அலுவலகத்திற்கு பேருந்து வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலாவிற்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு 7900 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.