தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களை ஷாக்கிங் நியூஸ்! என்ன விஷயம் தெரியுமா?

Published : Dec 24, 2024, 12:30 PM ISTUpdated : Dec 24, 2024, 12:38 PM IST

Tamilnadu Government Employees: அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனவும், பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

PREV
15
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களை ஷாக்கிங் நியூஸ்! என்ன விஷயம் தெரியுமா?
Government Employee

கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரின் சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு அதே மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். ஆனால், இந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

25
Chennai High Court

இதனையடுத்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. 

இதையும் படிங்க: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையில் இருந்து பறந்த முக்கிய உத்தரவு!

35
Right to Information Act

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8வது பிரிவின் கீழ் சில தனிப்பட்ட தகவல்கள் வழங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசுப் பணி சார்ந்த தகவல்களை வழங்கலாம். அரசு ஊழியர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அடிப்படை உரிமை எனவும் வாதிட்டார்.

45
Chennai High Court judge

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள் பாதுகாக்கப்பட்டவைதான் என்றாலும் அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் அவை பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது என தெரிவித்தார். 

இதையும் படிங்க: சென்னையில் சினிமாவை மிஞ்சிய கோர விபத்து! 20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் பலி! நடந்தது என்ன?

55
Government Employee

சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி, தகவல்கள் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அடுத்த 2 மாதங்களில் இதனை பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

click me!

Recommended Stories