Coimbatore: ஊட்டி, கொடைக்கானல் போன்ற வழக்கமான மலைப்பிரதேசங்களுக்குப் போய்ப் போர் அடித்துவிட்டதா? அப்படியென்றால், கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள இந்த 10 அசத்தலான சூப்பர் இடங்கள்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற வழக்கமான மலைப்பிரதேசங்களுக்குப் போய்ப் போர் அடித்துவிட்டதா? அப்படியென்றால், கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள இந்த 10 அசத்தலான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களுக்கு ஒரு விசிட் அடிக்கலாம். குறிப்பாக ஆன்மீகம், ட்ரெக்கிங், அருவிக்குளியல், பரிசல் சவாரி என எல்லாமே ஒரே மாவட்டத்தில் அமைந்துள்ளது இதன் சிறப்பு அம்சமாகும்.
210
வெள்ளையங்கிரி மலை
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இந்த மலைப்பிரதேசம், அடர்ந்த காடுகளும் யானை நடமாட்டமும் கொண்டது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இங்குச் செல்வது ஆபத்தானது. குறிப்பாக சித்ரா பௌர்ணமி சமயத்தில் ஆண்கள் தடி ஊன்றிக் கொண்டு செங்குத்தான 7 மலைகளைக் கடந்து, உச்சியில் உள்ள சிவபெருமானைத் தரிசிப்பது வழக்கம். இந்த மலைக்குச் செல்லும் வழியில்தான் ஈஷா யோகா மையமும் அமைந்துள்ளது.
310
மருதமலை முருகன் கோவில்
தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான இது. முருகப் பெருமானின் 7-வது படைவீடாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. எப்போதுமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் இக்கோவில், கோவை ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலை மீது ஏறிச் செல்ல பேருந்து வசதிகளும் உள்ளன; அல்லது 1000 படிக்கட்டுகளைக் கடந்தும் மலை உச்சியை அடையலாம்.
ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலமான இங்குப் பெயருக்கேற்றார் போலக் குரங்குகளின் நடமாட்டம் மிக அதிகமாக இருக்கும். எனவே, கொண்டு செல்லும் பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
510
சிறுவாணி அணை
உலகிலேயே இரண்டாவது சுவையான நீராகக் கருதப்படும் சிறுவாணி நீர், கேரளா-தமிழக எல்லையிலுள்ள நீரோடைகள் வழியாக இந்த அணைக்கு வந்து சேர்கிறது. அணை இருக்கும் பகுதி கேரளாவிற்குள் அமைந்திருந்தாலும், வெளிநாட்டுப் பயணிகள் வரை அனைவரும் இங்கு வந்து குவிகிறார்கள். கோவையிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள இந்த இடத்தின் கடைசி 8 கி.மீ தூரத்தை அடர்ந்த காட்டின் வழியே ஜீப் அல்லது வேன் மூலமாக மட்டுமே கடக்க முடியும்.
610
கோவை குற்றாலம்
கோவையிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள இந்த அருவி, இயற்கை விரும்பிகளின் சொர்க்கம். பச்சைப்பசேல் என்ற அடர்ந்த காடுகள், மேகக் கூட்டங்கள் சூழ்ந்த மலைகள், பேரருவி, சிற்றருவி எனப் பார்ப்பவர்களின் கண்ணுக்கும் மனதுக்கும் இதமளிக்கும் இடமாக இது திகழ்கிறது.
710
ஆழியாறு அணை
கோவையிலிருந்து 45 கி.மீ தூரத்திலுள்ள பொள்ளாச்சிக்கு அருகில், மலையடிவாரத்தில் இந்த பிரம்மாண்ட அணை அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் இந்த அணையில் எந்த நேரமும் போடிங் (படகு சவாரி) செய்வதற்கான வசதிகள் உள்ளன.
810
திருமூர்த்தி மலை
பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள உடுமலையிலிருந்து 18 கி.மீ தூரத்தில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. இங்குள்ள அணைப்பகுதியில் படகு சவாரி செய்யலாம். மேலும், மலைச்சரிவில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தைத் தரிசித்துவிட்டு, 2 கி.மீ மலைப்பாதையில் ஏறினால் ஆர்ப்பரித்துக் கொட்டும் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழலாம். கோடைக் காலங்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.
பர்லிக்காடு பரிசல் சவாரி
கோவை நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பில்லூர் அணையில், வனத்துறை சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பரிசல் சவாரி நடத்தப்படுகிறது. இங்குப் படகு சவாரி செய்வதுடன், பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு களி, கம்மங்களி, கம்மஞ்சோறு மற்றும் கருவாட்டுக் குழம்பு போன்ற கிராமத்துச் சுவைகளையும் ருசிக்கலாம்.
910
டாப் ஸ்லிப்
பொள்ளாச்சியிலிருந்து இரண்டரை மணி நேரப் பேருந்து பயணத்தில் டாப் ஸ்லிப் பகுதியை அடையலாம். வால்பாறை மலைகளுக்கு இடையே யானைகளின் புகலிடமாக விளங்கும் இங்கு யானை சவாரியும் செய்யலாம். அருகிலேயே பரம்பிக்குளம் அணையும் உள்ளது. மாலை நேரத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால், காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் உங்களது பயணத்தை முடித்துக் கொள்வது நல்லது.
1010
காடாம்பாறை அணை
குரங்கருவியிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள அட்டகட்டி பகுதிக்குச் சென்று, அங்கிருந்து 15 கி.மீ பயணித்தால் காடாம்பாறை நீரேற்று அணைத்திட்டப் பகுதியை அடையலாம். இயற்கையின் அரிய பொக்கிஷமாக விளங்கும் இந்த அணையின் சுற்றுவட்டாரக் காட்சிகள் உங்களை வியக்க வைக்கும்.