CM Vijay Vs DMK: தனி விமானம் பிடித்து ஓடிய விஜய்? அய்யோ அம்மா நெஞ்சு வலி கதறிய செந்தில் பாலாஜி! மாறி மாறி தரமான பதிலடி

Published : Jul 11, 2026, 09:55 AM IST

Karur Incident: கரூர் துயரச் சம்பவம் குறித்து முதல்வர் விஜய் திமுக அரசை விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விஜய் மக்களைக் காப்பாற்றாமல் ஓடிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். 

PREV
15
திமுக அரசை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். அதற்கு முன்னதாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை லெப்ட் ரைட் வாங்கினார். கரூரில் 41 பேர் பலியாக காரணம் அன்றைய காவல்துறை தங்களை தவறாக வழிநடத்தியது தான். அப்படி அவர்களை செய்யச் சொன்னது யார். திமுகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என்றார்.

25
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

இதற்கு திமுகவினர் கொதித்து எழுந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தவெக தலைவரும், முதல்வர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?

35
தனி விமானம் பிடித்து ஓடியது யார்?

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும். அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்? திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு... என தெரிவித்திருந்தார். இதற்கு தவெக தரப்பிலும் தரமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

45
தவெக ஐடி விங்

இதுதொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கரூர் கம்பெனி முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே கதறியது போலக் கதறி இருக்கிறார்.

55
இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது

“யாரை முதலமைச்சர் ஆக்கலாம்னு பார்த்தப்ப… அந்தப் பட்டியல்ல இவரும் இருந்தாருங்க… இவரு கெட்ட கேடு…” என்று ஸ்டாலின் சாரால் அன்பாக, பண்பாக, ஊழலற்ற நேர்மைக்காகப் புகழப்பெற்றவர்தான், இன்று நம் வெற்றித் தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கிளம்பி இருக்கிறார். அதைக்கூடப் பொதுவெளிக்கு வந்து கேட்கவில்லை. அதையும் ஒளிந்தபடி ஓடிக்கொண்டேதான் கேட்டிருக்கிறார். அரசியல் வியாபார vending machine திமுகவால் purchase செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் Don, இன்று நேர்மையாளர் போலப் பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது. உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத் திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம்????? நாடே சிரிக்கிறது இந்த நரித்தந்திர நாயகர், ஊழல் உத்தமரைப் பார்த்து. இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன் என்று கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories