தமிழகத்தில் 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளார். இது, 2026 ஜனவரிக்குள் 19,260 ஆசிரியர்களை நியமிப்பதாக முதலமைச்சர் அறிவித்ததன் ஒரு பகுதியாகும்.
ஆசிரியர்கள் தான் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக உள்ளனர். ஆசிரியர்கள் இல்லையென்றால் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனவே அரசு பள்ளியில் ஆசிரியர்கள் காலிப்பணியிடம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படுவதாகவும்,
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 2024-2025 கல்வியாண்டில் 23,972 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், இவற்றை நிரப்ப வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்காக ஆசிரியர்கள் பல கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
24
ஆசிரியர்கள் பற்றாக்குறை
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 2026 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் 19,260 ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். இந்த ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் பணிக்காக காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தற்போது 2340 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது
34
ஆசிரியர் தேர்வு
இதனையடுத்து தமிழ்நாட்டில் 2,457 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 2024 ஜூலை மாதம் 2,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தியது. இதில் 25,156 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஆலோசனை செயல்முறையை மேற்கொண்டது, மேலும் 2,342 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே 19ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப்படும் என அறிவித்து விட்டு தற்போது 2457 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுவதற்கு ஆசிரியர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருந்த போதும் முதல் கட்டமாக 2457 ஆசிரியர் நியமனம் செய்வதாகவும் விரைவில் காலிப்பணியிடம் நிரப்ப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(24.07.2025) வியாழக்கிழமை காலை 11.15 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.