Published : Jul 29, 2025, 08:00 PM ISTUpdated : Jul 29, 2025, 08:29 PM IST
வடமாநிலங்களில் நடக்கும் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பெருமிதம் தெரிவித்த அவர், மொழி அடிப்படையிலான பிரிவினை இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.
வடமாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் நடக்கும் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மாற்றங்களை "டிக்கிங் டைம் பாம்" என்று குறிப்பிட்ட அவர், மத்திய மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
24
பாகிஸ்தானுக்கு ஒரு பாடம்
குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பெருமிதம் தெரிவித்தார். ஒரு நாடு குறுகிய ராணுவ நடவடிக்கையால் அரசியல் இலக்கை அடைய முடியும் என்பதற்கு இது ஒரு உலகளாவிய உதாரணம் என்றார். பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலளித்த விதம் பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் எனவும் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் ராணுவ தலைமையின் சீரான ஒருங்கிணைப்புக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' ஒரு எடுத்துக்காட்டு என்ற ஆளுநர் ரவி, இந்த ராணுவ நடவடிக்கை இந்தியாவின் தற்காப்பு திறனை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
34
தேசப் பிரிவினை அபாயம்
மகாராஷ்டிரா, கர்நாடகாவில் மொழிப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய ஆளுநர், மொழியின் அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துவதை இந்தியாவின் கலாச்சார மரபு ஆதரிப்பதில்லை என்றார். அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கடந்த 30-40 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து ஆழமான ஆய்வு தேவை எனவும், எதிர்காலத்தில் இவை தேசப் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார். உள்நாட்டு மோதல்களைச் சமாளிக்க ராணுவ பலம் மட்டும் போதாது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மாவோயிஸ்ட் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர், காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதையும், அங்கு தற்போதைய நிலைமை சிறப்பாக உள்ளதாகவும் எடுத்துரைத்தார்.