ராமநாதபுரம் மன்னரையே வீழ்த்திய திமுக...! இளவரசர் எல்லாம் எம்மாத்திரம் கொக்கரிக்கும் உ.பி கள்

Published : Jul 29, 2025, 04:31 PM ISTUpdated : Jul 29, 2025, 04:40 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அன்வர் ராஜா திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மன்னர் வாரிசு நாகேந்திரன் சேதுபதி அதிமுகவில் இணைந்துள்ளார்.

PREV
14
தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் களம் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் ரகசியமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக அதிமுக - பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் அதிமுக கூட்டணியில் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் திமுக தனது கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்டமைத்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலமே உள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

24
திமுகவிற்கு பல்டி அடித்த அன்வர் ராஜா

ஒவ்வொரு தொகுதியிலும் அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா, எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்து திமுகவில் இணைந்தார். அதிமுக- பாஜக கூட்டணியால் அன்வர் ராஜா ஏற்கனவே அதிருப்தியுடன் காணப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா என மூத்த தலைவர்களோடு பணியாற்றிய அன்வர் ராஜா கட்சி தாவியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் சிறுபான்மையினரின் வாக்குகளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இழக்கும் நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.

34
தென் மாவட்டத்தில் பலத்தை இழக்கும் அதிமுக

ஏற்கனவே தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் சமுதாயத்தை சேர்ந்த வாக்குகள் அதிமுக இழந்து வரும் நிலையில், தற்போது சிறுபான்மை சமுதாயத்தை வாக்குகளையும் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவை வலுப்படுத்த திட்டமிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னர்களின் வாரிசும்,

மறைந்த ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதியின் மகனுமாகிய இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

44
அதிமுகவில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் குமரன் சேதுபதியின் மனைவியும் ராணியுமாகிய லட்சுமி குமரன் சேதுபதி, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதனிடையே கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற விழாவில், ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யாசேதுபதி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories