டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரின் கணிப்புப்படி, லாநினா போன்ற சாதகமான கடல் அலைவுகளால் டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும். டிசம்பர் 10 முதல் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளால் பருவமழை தீவிரமடையும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து விடாமல் வெளுத்து வாங்கியது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மற்றும் வட மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் ஒரு சில இடங்களில் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பொழியால் வெயில் சுட்டெரித்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே அவ்வப்போது மழை பெய்தது.
25
டிசம்பரில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்
இந்நிலையில் டிசம்பர் மாதம் தொடங்கியதுமே டிட்வா புயல் இலங்கையில் ருத்தரதாண்டவம் ஆடிய கையோடு தமிழகத்தில் நுழைந்தது. இதனால் ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து குடியிருப்புக்குள் நுழைந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இதனால் சென்னை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
35
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: எதிர்மறை இந்திய பெருங்கடல் இருமுனை நிகழ்வு தற்போது வலுகுறைய துவங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் லாநினா அமைப்பு முழுமையாக ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. லாநினா, எதிர்மறை IOD, கடல் வெப்பநிலை, கடல் சார்ந்த அலைவுகளின் சாதகமான நிலைகள் டிசம்பர் மாதத்தில் இயல்பிற்கு அதிக மழைப்பொழிவிற்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 10 முதல் 12 காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இணைந்த கீழைக்காற்றின் காரணமாக 5ம் சுற்று மழை துவங்கி கடலோர மாவட்டங்களில் பரவலாக மழையை கொடுக்கும். டிசம்பர் 15ம் தேதிக்கு பின்பு அடுத்தடுத்து தாழ்வு பகுதிகள் உருவாக கூடும். இதனால் டிசம்பர் 15 முதல் 21க்கு இடைப்பட்ட தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி பருவமழையை தீவிரப்படுத்தும்.
55
ஜனவரியிலும் மழை
டிசம்பர் 4 வது வாரத்தில் தெற்கு வங்ககடலில் உருவாக கூடிய தாழ்வு பகுதி, புயல் சின்னமாக வலுபெற வாய்ப்பு. ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாத மழை இயல்பிற்கு அதிகமாக அமைந்து, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களுக்கு நல்ல மழைப்பொழிவை கொடுக்கும். வட மாவட்டங்கள் & காவிரி டெல்டா & தென் மாவட்டங்களுக்கு மேலும் இரண்டு தீவிரமான வடகிழக்கு பருவமழை சுற்றுகள் ஜனவரி முதல் வாரத்திற்குள் மழையை கொடுக்கும் தெரிவித்துள்ளார்.