அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் ஆன நிலையில், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது வருண்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு பிரபல தியேட்டரில் சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை.
அதிமுக ஆட்சியில் தற்போது திமுகவின் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். கடந்த 2012 மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
25
சிறப்பு புலனாய்வு குழு
அப்போது இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக முதலில் தில்லை நகர் போலீசார், சிபிசிஐடி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் விசாரித்தும் கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
35
வருண்குமார் பல்வேறு கோணங்களில் விசாரணை
பின்னர் திமுக ஆட்சிக்கு பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டு அப்போதைய திருச்சி சரக டிஐஜி வருண்குமார், தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை விசாரணை அதிகாரிகளாக உயர்நீதிமன்றம் நியமித்தது. அதன்படி விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் டிஐஜி வருண்குமார் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன் புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணாவிடமும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் சுடலைமுத்துவிடம் விசாரித்தனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் தொழிற்பயிற்சிக்காக வந்திருந்தார். அப்போது ராமஜெயம் கொலை தொடர்பாக மற்றொரு கைதியுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
55
தியேட்டரில் சதி திட்டம் தீட்டப்பட்டதா?
இதற்கிடையே திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார் தற்போது சிபிசிஐடி டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை திருச்சி பாலக்கரையில் உள்ள பிரபல தியேட்டருக்கு வந்து உரிமையாளர் மற்றும் தியேட்டரில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். ராமஜெயம் கொலை தொடர்பாக இந்த தியேட்டரில் சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.