நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை EMIS தளத்தில் சரிபார்க்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு எனவும் தேர்வுத்துறை கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
24
EMIS தளத்தில்
இதற்காக பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதனையடுத்து EMIS தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், பெற்றோர் பெயர், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்விறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.
34
கால அவகாசம் நீட்டிப்பு
அதன்படி, மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள இதுவே இறுதியான வாய்ப்பாகும். இதை தலைமையாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டும். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.