24 மணி நேரத்தில் சுழன்றடிக்க போகும் மோன்தா புயல்! எங்கே கரையை கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?

Published : Oct 26, 2025, 10:15 AM IST

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மோன்தா புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
14
வடகிழக்கு பருவ மழை ஆரம்பம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் அதி தீவிரம் காட்டிய பருவமழை சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. ஆனால் அதன்பிறகு மழையின் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே வடகிழக்கு பருவ மழையின் முதல் புயலான மோன்தா புயல் நாளை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

24
உருவாகும் மோன்தா புயல்

அதாவது நேற்று முன்தினம் காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. 

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 26 ம் தேதி (இன்று) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் (மோன்தா) வலுமவடையும் என்று கூறப்பட்டு இருந்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்

இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை மோன்தா புயலாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ஆம் தேதி வாக்கில் தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும்.

34
எங்கே கரையை கடக்கும்?

இதனைத் தொடர்ந்து இந்த தீவிர புயல் ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் 28ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 790 கி.மீ. தூரத்தில் இந்த புயல் சின்னம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

44
சென்னையில் மழை பெய்யுமா?

மோன்தா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது ஆந்திராவிலும், ஒடிசாவின் சில பகுதிகளிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் புயல் கரையை கடக்கும் வேளையில் சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories