ரவுண்டு கட்டி விஜய்யை போட்டு தாக்கும் நீதிமன்றம்..! ரூ.1.50 கோடி அபராதம் செலுத்த உத்தரவு

Published : Feb 06, 2026, 11:31 AM IST

புலி படத்தில் நடித்ததற்கு சம்பளமாக பெறப்பட்ட ரூ.15 கோடியை மறைத்ததற்காக வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

PREV
13
வருமானத்தை மறைத்த விஜய்

நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 2016 – 17ம் ஆண்டு ரூ.35 கோடி வருமானம் பெற்றதாகக் கோரி கணக்கு காண்பித்தார். இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கடந்த 2015ம் ஆண்டு நடித்த புலி படத்திற்கு சம்பளமாக பெறப்பட்ட ரூ.15 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை விதித்த அபராதம் மிகவும் தாமதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது விதி மீறல் ஆகவே வருமான வரித்துறையின் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

23
ரூ.1.5 கோடி அபராதம்

இந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மனுதாரர் குறிப்பிட்டது போல அபராதம் விதித்ததில் விதி மீறல் இல்லை. விஜய் ரூ.1.5 கோடி அபராதத் தொகையை செலுத்த வேண்டுமெனக் கூறி விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

33
மேல்முறையீட்டுக்கு அனுமதி

அபராத வழக்கில் விஜய்யின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டுமென விஜய் தரப்பில் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அபராத உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் அணுகலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories