Cooking gas tanker truck strike called off: எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிவாயு மையங்களுக்கு கேஸ் விநியோகம் செய்யும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 27ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வீட்டு மற்றும் வணிக கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் தடைபடும் அபாயம் நிலவியது.
24
Cooking Gas tanker truck strike
தமிழ்நாட்டில் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டல கேஸ் டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் உள்ளனர். 2025 முதல் 2030ம் ஆண்டுகளுக்கான புதிய வாடகை ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு இருந்த நிலையில், கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இதை ஏற்றுக்கொள்ளாத கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் விதிகளை தளர்த்தக்கோரி எண்ணெய் நிறுவனங்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
44
Cooking Gas tanker
அவர்களிடம் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி.எல். உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் மறுபக்கம் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்ததால் வீடுகள் மற்றும் ஹோட்டல்களுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இதனால் இல்லத்தரசிகள் கவலையில் திளைத்து வந்தனர். இந்நிலையில், கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.
கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன. இதனை ஏற்று கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.