நாளை பொது விடுமுறை அதுவுமா தமிழகத்தில் மின்தடையா?
தமிழகத்தில் கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் தொடங்கி விட்டதால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகத்தை அளிப்பது தொடர்பாக, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக நாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் பழுதுகள் சரி செய்வது பணியில் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: கனமழைக்கு நாள் குறித்த வானிலை! எந்தெந்த மாவட்டங்களில் ஊத்தப்போகுது தெரியுமா?
அந்த வகையில் நாளை பொது விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுமா என்பதை பார்ப்போம். அதாவது, தமிழகத்தில் 11, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்ததை அடுத்து தற்போது 10ம் வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மின்சாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வு முடியும் வரை மின்தடை செய்யப்படாது. தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.