அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு

Published : Mar 07, 2026, 02:44 PM IST

Rape Case: இளைஞரை காரில் இருந்து இழுத்து போட்டு தாக்கி அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
கோவை தனியார் கல்லூரி

கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த மாணவி தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை விமான நிலையம் பின்புறத்தில் இருக்கக்கூடிய இடத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தார்.

25
கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் இவர்களை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் அந்த இளைஞரை காரில் இருந்து இழுத்து போட்டு தாக்கியது மட்டுமல்லாமல் அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர். பின்னர் கத்தி முனையில் 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

35
மாணவி மீட்டு மருத்துவமனையில் அனுமதி

அந்த கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிர்வாண நிலையில் கிடந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையிலும், படுகாயமடைந்த ஆண் நண்பர் 10 தையல்கள் போடப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

45
குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீஸ்

இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி மூன்று பேரையும் போலீசார் சுட்டு பிடித்தனர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்துக்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

55
நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சுமார் 150 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories