கோவை கல்லூரி மாணவி மற்றும் அவரது நண்பரை தாக்கி, மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்த போலீசார், குற்றவாளிகள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த மூன்று இளைஞர்கள் இருவரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை பார்த்தனர். பின்னர் முதலில் கார் கண்ணாடி உடைத்து அந்த ஆண்பரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் வெட்டி விட்டு அந்த கல்லூரி மாணவியை புதருக்கு தூக்கிச் சென்று மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
26
புதருக்குள் ஆடைகள் கலைந்த நிலையில் மாணவி
இந்த சம்பவத்தில் தொடர்பாக மயக்கத்தில் இருந்த ஆண் நண்பர் எழுந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் சில மணி நேரங்களாக தேடியுள்ளனர். பின்னர் புதருக்குள் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்த இளம்பெண் மற்றும் ஆண் நண்பரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
36
திருட்டு மொபட்
இளைஞர் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது, தாங்கள் வந்த மொபட்டை அங்கேயே நிறுத்திச் சென்றனர். போலீஸாரின் விசாரணையில் அது திருட்டு மொபட் எனத் தெரிந்தது.
இந்நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து நள்ளிரவு வெள்ளக்கிணறு பகுதியில், குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் காலிலும் சுட்டுப் பிடித்தனர். இவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), குணா என்ற தவசி (20) என்பது தெரிந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கருப்புசாமி, காளீஸ்வரன் ஆகியோர் அண்ணன் - தம்பிகள் என்பது தெரியவந்தது.
56
பாதிக்கப்பட்ட மாணவி நலம்
மேலும் இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. கைதானவர்களிடம் இருந்து மாணவியின் செல்போன், மோதிரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவியும் சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறி வருவதாகவும் அவருக்கு கவுன்சலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
66
விடாமல் மாறி மாறி பலாத்காரம்
இந்நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோவையில் கல்லூரி மாணவியை இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை சுமார் 3.30 மணி வரை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. காரில் இருந்த இளம்பெண்ணை 300 மீ. தொலைவில் உள்ள மோட்டார் அறைக்கு தூக்கிச் சென்று வன்கொடுமை செய்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.