தொகுதி மறுவரையறை.. ஒரே வாரத்தில் பல்டி அடித்தாரா முதல்வர் விஜய்? அமித்ஷா முன் பேசியது என்ன?

Published : Aug 20, 2026, 06:40 PM IST

Delimitation Controversy: தொகுதி மறுவரையறை விவகராத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே வாரத்தில் முதல்வர் விஜய் இன்று பல்டி அடித்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. அமித்ஷா முன் விஜய் என்ன பேசினார்? என பார்ப்போம்.

PREV
14
அமித்ஷா முன் பேசிய முதல்வர் விஜய்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தென் மண்டல கவுன்சிலின் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறை சட்டத்தால், எந்த மாநிலமும் தங்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்காது என்று மத்திய அரசு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை குறித்து பேசிய விஜய்

அதாவது "1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் லோக்சபா இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடக்கம் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், 2026 தொகுதி மறுவரையறை மசோதா பரிசீலனையில் உள்ளது. மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தால், நாடாளுமன்றத்தில் நமது ஒட்டுமொத்த குரல் குறைந்துவிடுமோ என்ற உண்மையான மற்றும் பொதுவான கவலை அனைத்து தென் மாநிலங்களிலும் உள்ளது" என்று அவர் கூறினார்.

24
தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது

தொடந்து பேசிய முதல்வர் விஜய், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றும் கூறினார். "மக்கள் தொகையை நிலைப்படுத்துதல், மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இந்த சாதனைகள், தேசிய முன்னுரிமைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியதையே காட்டுகின்றன. இதற்காக எங்கள் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது சரியாகாது. தேசிய நோக்கங்களை நிறைவேற்றும் மாநிலங்களை, பொதுக் கொள்கைகள் தண்டிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது" என்றார்.

மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்

மேலும் ''மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் காரணமாக, எந்த மாநிலத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சதவீதமும் குறைக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இது நமது அரசியலமைப்புச் சட்டம் கூறும் கூட்டாட்சி தத்துவத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் நிலைநிறுத்தும். மேலும், நமது ஜனநாயக அமைப்புகள் மீது அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும்'' விஜய் தனது பேச்சின்போது சுட்டிக்காட்டினார்.

34
விஜய் பல்டி; திமுக குற்றச்சாட்டு

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை விவாகரத்தில் ஒரே வாரத்தில் முதல்வர் விஜய் ஒரே வாரத்தில் பல்டி அடித்து விட்டதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. அதாவது தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது. மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சியான திமுகவும் ஆதரவு தெரிவித்து இருந்தது. அதே வேளையில் இன்று அமித்ஷா முன்பு பேசிய முதல்வர் விஜய், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதை கூறவில்லை. மாறாக, தொகுதி மறுவரையறை சட்டத்தால், எந்த மாநிலமும் தங்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்காது என்று மத்திய அரசு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மாற்றி பேசியுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

44
தவெக விளக்கம்

திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ள தவெக, திமுக வழக்கம்போல் தவறான தகவலை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தவெக, ''மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆற்றப்பட்ட உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்கள்.

தமிழ் நாடு சட்டமன்றத்தில் 12.8.2026 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது. அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி 12.8.2026 அன்றே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது'' என்று கூறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories