நானும் ரவுடிதான் என்பது போல் நான் தான் கூட்டணிக்கு தலைவர் என்கிறார் பழனிசாமி.. முதல்வர் செம கலாய்..

Published : Feb 07, 2026, 11:37 PM IST

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் தான் டாப். ஆனால் பட்ஜெட் என்று வந்தால் நமக்கு ஜீரோதான். அதையே வரும் தேர்தலில் பாஜகவுக்கு நாம் திருப்பிக்கொடுப்போம். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு.

PREV
14
Mk Stalinதிமுக என்றால் பிரம்மாண்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திமுக கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக என்றால் பிரம்மாண்டம். அதிலும் இளைஞர் அணி என்றால் மிகப்பெரிய பிரம்மாண்டம். நமக்கு மாநாடு என்பது மாதாமாதம் நடக்கக் கூடியதாகிவிட்டது. இன்னும் 5 மாநாடுகள் நடக்க உள்ளன. விருதுநகர் என்று சொன்னாலே நினைவுக்கு வருவது மருது சகோதரர்களும், காமராஜர் உள்ளிட்டோரும் தான். திராவிட மாடல் என்று சொன்னால் அனைவருக்கும் நினைவில் வருவது காலை உணவு திட்டம்.

24
நான் ரெடி நீங்க ரெடியா..?

அடுத்து வரும் தேர்தலில் நமது வெற்றி உறுதி. 2004ல் தென்மண்டல மாநாடு நடத்தப்பட்டதில் 40க்கு 40 வெற்றி பெற்றோம். 2019ம் ஆண்டும் மிகப்பெரிய வெற்றியைத் தொர்ந்து 2024லிலும் 40-40 வெற்றி பெற்றோம். இன்று புதிய சாதனை படைக்க தயாரா. வெல்வோம் 200. அதற்காக உழைக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா. இளைஞர் அணி தொடங்கிய போது இந்த மாவட்டத்தில் என் காலடி படாத இடமே கிடையாது. 22 லட்சம் பட்டாக்களை கடந்த 5 ஆண்டுகளில் வழங்கி உள்ளோம். இந்தி கொள்கையை திணிப்பதற்கு மும்மொழிக் கொள்கை என்ற கத்தி நம் தலைக்கு மேல் உள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. கல்வி மறுக்கப்பட்டபோது இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து கல்வி கொடுத்தது தமிழகம். இப்போது நீட் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து எதிர்த்து வருவது திமுக மட்டும்தான். மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாத நிலையை மாற்றியது தமிழகம். மற்ற மாநிலங்களுக்கும் பல்வேறு உரிமைகளை தமிழகம் பெற்றுத்தந்துள்ளது.

34
மெத்தனமாக இருக்காதீர்கள்

மாநில கட்சிகள் இருக்கக் கூடாது என்று பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. சுயமரியைதை முக்கியம். துரோகிகள் ஒன்று சேர்ந்து தமிழகத்தை தலைகுணியச் செய்வதை நாம் விட மாட்டோம். தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் திமுகவுக்கும் நீங்கள் தேவை. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்கக் கூட முடியாது. நாம் 7வது முறையாக நிச்சயம் ஆட்சி அமைப்போம். எதிரிகளுக்கும் இதில் சந்தேகம் கிடையாது. ஆனால், நாம் மெத்தனமாக இருக்காமல் தொடர்ந்து மக்களை சந்தித்து பரப்புரையின் கடைசி நேரம் வரை நமது சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

44
நானும் ரவுடிதான் என்பது போல் நான் தான் கூட்டணிக்கு தலைவர் என்கிறார் பழனிசாமி

அனைத்து துறைகளிலும் தமிழகம் தான் டாப். ஆனால் பட்ஜெட் என்று வந்தால் நமக்கு ஜீரோதான். அதையே வரும் தேர்தலில் பாஜகவுக்கு நாம் திருப்பிக்கொடுப்போம். நானும் ரவுடிதான் என்றும் என் தலைமையில்தான் கூட்டணி என்றும் நான் தான் தலைமை என்றும் எடப்பாடி கூறி வருகிறார். மிகப்பெரிய தோல்வியை என்டிஏ கூட்டணி பெரும். திமுக மிகப்பெரிய வெற்றியைப்பெறும். அதற்காக நீங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories