நண்பர்களோடு நைட் டிரைவிங்.. டிரைவர் இருந்தாலும் நான் தான் தூங்காம கார் ஓட்டுவேன்- ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி

First Published Mar 27, 2023, 8:25 AM IST

இரவு நேரங்களில் கார் ஓட்டிச் செல்லும்போதெல்லாம் லியோனியின் கேசட்டுகளை கேட்டுக்கொண்டு செல்வேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட்டிமன்ற பேச்சாளர் லியோனி எழுதிய ‘வளர்த்த கதை சொல்லவா’ என்கிற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னைப்பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தனக்கு நைட் டிரைவிங் மிகவும் பிடிக்கும் எனவும், நண்பர்களோடு சேர்ந்து நைட் டிரைவிங் சென்றது குறித்து குட்டி ஸ்டோரி ஒன்றையும் ஸ்டாலின் கூறி இருந்தார்.

அதில் அவர் பேசியதாவது : “நான் இளைஞரணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டப்போது காரில் தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். அந்த சமயத்தில் என்னுடன் திருச்சி சிவா, சகோதரர் பரணிக்குமார், என்னுடைய உயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழி ஆகியோருடன் தான் செல்வேன். பெரும்பாலும் பரணிக்குமார் தான் பகலிலே கார் ஓட்டுவார். டிரைவர் வருவாரு ஆனா கார் ஓட்ட மாட்டாரு. பின்னாடி அமர்ந்துகொண்டு வருவார்.

இதையும் படியுங்கள்... தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்... அண்ணாமலை வலியுறுத்தல்!!

டிரைவரின் வேலை என்னவென்றால், நாங்கள் எங்காவது காரை நிறுத்திவிட்டால், அதனை திருப்பி வைப்பது மட்டும் தான். பகல்ல பரணிக்குமார் ஓட்டுவாரு, இரவு முழுக்க நான் ஓட்டுவேன். இரவு எப்போதும் தூங்கமாட்டேன். இப்போ எப்படி தூங்காமல் இருக்கிறேனோ, அப்பவும் அப்படித் தான். ஏன் இரவு தூங்காம இருக்கீங்கன்னு இப்பவும் பல பேர் கேட்குறாங்க, எனக்கு தூங்காம இருப்பது புதுசில்ல அது பழகிப்போச்சு.

ஒவ்வொரு மாவட்டமா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அன்று இரவே இன்னொரு மாவட்டத்துக்கு போய் விடுவோம். அப்படி இரவில் கார் ஓட்டிச் செல்லும்போது தொடர்ந்து லியோனியின் கேசட்டுகளை தான் நான் கேட்டுக்கொண்டு செல்வேன். அந்த கேசட்டுகளை கேட்டுக்கொண்டு போனால் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு சுவாரஸ்யமாக பேசியிருப்பார். நகைச்சுவையோடு இருக்கும், சிரித்துக்கொண்டே அதை கேட்டுட்டு போவோம். அப்படி கேட்டு கேட்டு அவருடைய ரசிகனாகவே நான் மாறிவிட்டேன்” என ஸ்டாலின் அந்த விழாவில் பேசி இருந்தார்.

இதையும் படியுங்கள்... இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கின்றனர்... ராகுல் தகுதி நீக்கம் குறித்து துரைமுருகன் கருத்து!!

click me!