TN Rain : மக்களே உஷார்..! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை ஊத்தப்போகுது.!! எங்கு தெரியுமா?

First Published Mar 18, 2023, 3:34 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பலதரப்பட்ட மக்களும் சுட்டெரிக்கும் வெயிலால் அவதியடைந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

இதேபோல் நாளை மறுதினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 21ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் 22ம் தேதி கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க..இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில்,  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரிசெல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..ஒரே டார்ச்சர்.!! மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை.. கடைசியில் தோழி எடுத்த அதிரடி முடிவு

click me!