கோவை, உக்கடம் டவுன்ஹால் பகுதியில் இருக்கக்கூடிய லங்கா கார்னர் பகுதியில் பாலத்திற்கு மேலே ரயில் செல்லக்கூடிய இரும்பு பாதை அமைந்துள்ளது. பாலத்திற்கு கீழே வாகனங்கள் செல்லக்கூடிய பாதையாகவும் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக கடந்து சென்று வருகிறது.
அப்பகுதியின் அருகே ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களும் அந்த பகுதியில் இயங்கி வருவதால் எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய சாலையாகவே உள்ளது