TN Rain : அலெர்ட்.!! 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

First Published Mar 25, 2023, 12:30 PM IST

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நம் தமிழகத்தில் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் பல மாவட்டங்களில் சுட்டெரிக்க தொடங்கியது. தமிழகத்தில் அவ்வப்போது சில மாவட்டங்களில் வெளியிலும், மழையும் காலநிலை மாறி மாறி வருகிறது.

கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் இரவு வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை மழை போக்கியது.

மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தென்  இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் வளிமண்டல கிழடுக்கு திசை காற்றும் மேலடுக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

எனவே இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வானிலை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்

click me!