School Student
திமுக அரசு வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரம்ப கல்வியே அடிப்படை கல்வி என்ற நோக்கில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என மாநில பாடத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
Aptitude Test
இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். இந்நிலையில் முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Directorate of Government Examinations
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: பள்ளி மாணவர்களுக்கான தமிழக முதல்வர் திறனாய்வு தேர்வு ஜனவரி 25-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகை தாள்கள், தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
CM Aptitude Test Hall Ticket
அதை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான ஹால் டிக்கெட்களையும் மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
Scholarship
அதன்பின் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்களை விநியோகம் செய்து, தேர்வு மைய விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். ஹால் டிக்கெட்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் தலைமையாசிரியர்கள் அதை சிவப்பு நிற மை பேனாவால் திருத்திக் கொள்ளலாம். மாணவர் புகைப்படம் தவறாக இருந்தால் புதிய படத்தை ஹால் டிக்கெட்டில் ஒட்டி அதன் மீது பள்ளியின் முத்திரையை பதிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வுக்கான அனுமதி தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.