முன்னாள் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் திடீர் மறைவு! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!

First Published | Jan 16, 2025, 1:10 PM IST

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். 

AIADMK

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தரம்(73). அதிமுகவில் மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில், அதிமுக சார்பில் தமிழகத்தில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர். ராசிபுரம் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.ஆக இருந்த அவர், 2014 முதல் 2019 வரை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

PR Sundaram

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் இரு அணிகளும் இணைந்த நிலையில், அதிமுகவில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

Tap to resize

Sundaram passed away

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த அவருக்கு திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். 

PR Sundaram News

அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால்  பி.ஆர்.சுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

CM Stalin

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

Latest Videos

click me!