தமிழக மக்களே ரெடியா..? ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3000 வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

Published : Jan 06, 2026, 11:36 AM IST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த செங்கரும்பு, ரூ.3000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தினை வருகின்ற 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

PREV
13
பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு செங்கரும்பு, பச்சரிசி, வெள்ளம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.

23
கரும்பு கொள்முதல் செய்யும் பணி தீவிரம்

பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்களை கடைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள முழு கரும்பு கொள்முதலும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

33
8ம் தேதி தொடங்கி வைக்கும் முதல்வர்

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வருகின்ற 8ம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கும் பணிகளும் தற்போது தீவிமாக நடைபெற்று வருகின்றன. வருகின்ற 8ம் தேதித் தொடங்கும் இத்திட்டம் 13ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories