பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ஜனவரி 6ம் தேதி வரை தான் டைம்! ரூ.10,000 அள்ளி கொடுக்கும் தமிழக அரசு!

Published : Jan 05, 2026, 12:27 PM IST

Talent Exam: தமிழக அரசின் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026 ஜனவரி 31 அன்று நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான இத்தேர்வில் தேர்ச்சி பெறும் 1000 பேருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

PREV
15
முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இது மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2023- 2024ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

25
அரசு தேர்வுகள் இயக்ககம்

இக்கல்வியாண்டிற்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

35
ரூ.10,000 உதவித்தொகை

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் இடம்பெறுவார்கள். தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 என்ற விதம் ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

45
கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி 2025-26ம் கல்வி ஆண்டிற்கான இத்தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவு நடைபெற்று வந்த நிலையில், அதற்கான கால அவகாசம் ஜனவரி 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

55
தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வானது தாள் 1 (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10 முதல் 12 வரையிலும், தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 60 வினாக்கள்) பிற்பகல் மணி 2 முதல் 4 மணி வரையிலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories